தலையின்றி வந்து அதிர்ச்சி கொடுத்த சிறுமி?

தலையின்றி வந்து அதிர்ச்சி கொடுத்த சிறுமி?

உலகின் பல்வேறு நகரங்களிலும் அண்மையில் ஹாலோவின் திருவிழா கொண்டாடப்பட்டுள்ளது.

இதன்போது இடம்பெற்ற ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.

பிலிப்பைன்ஸின் பாரானுக்குவே என்னும் நகரம் உள்ளது. இந்த நகரத்தில் வசித்து வருபவர் கிறிஸ்டல் ஹவாங்.

இவருக்கு 2 வயதில் மாயா என்ற பெண் குழந்தை இருக்கிறாள். இந்த குழந்தையின் வீடியோ ஒன்று தற்போது இணையத்தளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இவர் இந்த விழாவில் எதாவது அசத்தலாக செய்ய வேண்டும் என நினைத்து தனது மகள் மாயா, தனது தலையை தனியே வெட்டி தன் கையில் எடுத்து வருவதுபோல ஒப்பனை செய்திருந்தார்.

2 வயது சிறுமி ஒருத்தி தலையில்லாமல் வெறும் முண்டமாக நடந்து வருவதை பார்த்த பெரும்பாலானோர் அதிர்ச்சி அடைந்தனர்.

மாயா தன் தலையை தானே கையில் கொண்டு வரும் இந்த வித்தியாசமான வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது.

Copyright © 8593 Mukadu · All rights reserved · designed by Speed IT net