தீபாவளி பண்டிகையை கொண்டாட தயாராகும் மலையக மக்கள்!
தீபாவளி பண்டிகை நாளை(செவ்வாய்கிழமை) கொண்டாடப்படவுள்ள நிலையில், மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அத்துடன், தீபாவளி திருநாளை வரவேற்க மலையக தோட்ட மக்கள் தற்போது ஆயத்தமாகி வருகின்றனர்.
தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டுள்ளது.
அதற்கு ஏற்ப பொருட்கள், உடைகள் கொள்வனவு, வீட்டுக்கு வர்ணம் பூசுதல், வீட்டை துப்பரவு செய்தல், திண்பண்டங்கள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு இன்றைய தினம் ஹட்டன் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.