ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது!

ஆயுதங்களை பயன்படுத்தாத சதிப்புரட்சியே இலங்கையில் அரங்கேறுகிறது!

இலங்கையில் தற்போது ஆயுதங்களை பயன்படுத்தாமல் சதிப்புரட்சியே இடம்பெற்று வருவதாக சர்வதேசத்துக்கு சபாநாயகர் கருஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இலங்கையிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களிலுள்ள இராஜதந்திரிகளுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

அதில் சபாநாயகர் கூறியதாக மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

“இலங்கை அரசில் கடந்த ஒருவார காலமாக சதிப்புரட்சியே இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு ஜனநாயகத்துக்கு முரணாக தற்போது நடைபெறும் அரசியல் செயற்பாடுகள் முன்கூட்டியே திட்டமிடப்பட்டுள்ளது.

அந்தவகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளிப்படைத்தன்மை, ஒழுக்கம், நல்லாட்சி மற்றும் ஜனநாயகத்துக்கு முரணாக செயற்பட்டு வருகின்றார்.

மேலும் நல்லாட்சியில் நிலைநிறுத்துவதாக ஜனாதிபதி கூறிய அனைத்து விடயங்களுக்கும் முரணாக செயற்பட்டு வருகின்றார்.

அதாவது ஆயுதங்களை பயன்படுத்தாமல் சதிப்புரட்சியில் ஜனாதிபதி மற்றும் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஈடுபட்டு வருகின்றனர்” என கருஜயசூரிய அக்கடிதத்தில் கூறியுள்ளதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

Copyright © 3099 Mukadu · All rights reserved · designed by Speed IT net