இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைக்க திட்டம்!

நாடாளுமன்றத்தில் மைத்திரி அரசாங்கத்திற்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் ஏற்பட்டுள்ள நெருக்கடியால் நாடாளுமன்றத்தை கலைக்க வாய்ப்புள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படுவதற்கான வாய்ப்பு 90 சதவீதம் உள்ளதாக குறித்த தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

19ஆம் அரசியல் திருத்தச் சட்டத்தின் படி நாடாளுமன்றத்தை ஜனாதிபதியால் கலைக்க முடியாது.

அப்படி கலைப்பதானால் நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க வேண்டும்.

இவ்வாறில்லாமல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் உயர் நீதிமன்றத்தை நாட வேண்டிய சூழ்நிலை உருவாகலாம்.

எனினும் ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு உட்பட்டு நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது சரியா, பிழையா என்ற சூழ்நிலையில், ஜனாதிபதிக்கு எதிராக தீர்ப்பு வழங்க முடியும் என 19ஆம் திருத்த சட்டத்தில் எந்த விடயமும் குறிப்பிடப்படாததால் உயர் நீதிமன்றம் நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டது சரியே என்ற தீர்ப்பை வழங்க சாத்தியம் உள்ளது.

நாடாளுமன்றில் மகிந்த மற்றும் ரணில் ஆகிய இரு தரப்புக்களும் பெரும்பான்மையை இழந்துள்ளமை, தற்போதைய நிலையில் மைத்திரிக்கு உள்ள அரசியல் நெருக்கடி , ஜனநாயகத்தை நிலை நாட்டவேண்டுமென்ற கோரிக்கையை அடிப்படையாக கொண்டு கட்சித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பில் அவர்களின் சரியான பதில் கிடைக்காமை போன்றவற்றால் நாடாளுமன்றத்தை கலைப்பதற்காக சட்ட வல்லுனர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் நெருக்கடிகளில் இருந்து தப்பிப்பதற்காக நாடாளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக உறுதிப்படுத்தப்படாத நம்பகமான கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைக்க திட்டமிட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை முன்னாள் அமைச்சர் சரத்பொன்சேகா இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

Copyright © 0768 Mukadu · All rights reserved · designed by Speed IT net