நான் ஒன்றும் ஏல விற்பனை பொருள் அல்ல!

நான் ஒன்றும் ஏல விற்பனை பொருள் அல்ல!

தாம், கட்சி மாறுவதற்கு எண்ணியிருந்தபோதும் பின்னர் மனதை மாற்றிக்கொண்டதாக வெளியாகும் தகவல்களை நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க மறுத்துள்ளார்.

தாம் ஏலவிற்பனைக்கு செல்லும் அளவுக்கு விற்பனைப்பொருள் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தநிலையில் மஹிந்த ராஜபக்சவின் பதவி அரசியமைப்புக்கு முரணானது என்றும் ரணில் விக்ரமசிங்கவே பிரதமர் என்ற நிலைப்பாட்டில் தாம் இருப்பதாகவும் ரவி கருணாநாயக்க ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net