பிரித்­தா­னிய ஆயு­தப்­ப­டை­களில் இலங்­கை­யர்­களும் இணை­யலாம்!

பிரித்­தா­னிய ஆயு­தப்­ப­டை­களில் இலங்­கை­யர்­களும் இணை­யலாம்!

பிரித்­தா­னி­யாவில் வசிக்­காத இலங்­கை­யர்­களும் கூட பிரித்­தா­னிய ஆயுதப் படை­களில் இணைந்து கொள்ள முடியும் என்று பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்சு அறி­வித்­துள்­ளது.

இந்­தியா, இலங்கை, அவுஸ்தி­ரே­லியா, கென்யா, பிஜி, உள்­ளிட்ட பொது­ந­ல­வாய நாடு­களைச் சேர்ந்­த­வர்கள் பிரித்­தா­னி­யாவில் வசிக்­காத போதும், பிரித்­தா­னிய ஆயுதப் படை­களில் இணைந்து கொள்ள முடியும் என்றும் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

பொது­ந­ல­வாய நாடு­களைச் சேர்ந்­த­வர்­களை பிரித்­தா­னிய ஆயு­தப்­ப­டை­களில் சேர்த்துக் கொள்­வ­தற்­கான விதி­மு­றை­களைத் தளர்த்தும் இந்த முடிவு பிரித்­தா­னிய பாது­காப்பு அமைச்­சினால் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net