போதையில் கைகளை வெட்டிக்கொண்ட மாணவிகள்!
கட்டுகஸ்தோட்ட நகரத்தில் அமைந்துள்ள கலவன் பாடசலையில் கைகளை வெட்டிக்கொண்ட நிலையில் மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எட்டாம் வகுப்பில் கல்வி பயிலும் மாணவியொருவர் தனது நண்பிகளுக்கு வழங்கிய டொபியை உண்ட மாணவிகள் மூவரே இவ்வாறு வைத்தியசலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த டொபியை வழங்கியதாக கூறப்படும் மாணவியை கைது செய்துள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலிஸார் குறிப்பிட்டனர்.
டொபியை உண்ட குறித்த பாடசலை மாணவிகள் பலர் தங்கள் கைகளிலும் கால்களிலும் வெட்டிக்கொண்டு காயங்ளை ஏற்படுத்திக்காண்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கடுகஸ்தோட்ட பாடசாலை அதிகாரிகளால் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட அவசர தகவலின் அடிப்படையில், அங்கு சென்ற பொலிஸார் காயமடைந்த மாணவிகளை கடுகஸ்தோட்ட அரச மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
போதை டொபியை வழங்கியதாக கூறப்படும் 13 வயதான மாணவியை கைது செய்து, பொலிஸார் விசாரணைளை மேற்கொண்டபோது, அண்மையில் அறிமுகமான தன் காதலன் குறித்த டொபிகளை வழங்கியதாக அந்த மாணவி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முழுமையான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்ட பொலிஸார் தெரிவித்தனர்.