மயிரிழையில் உயிர் தப்பிய கோத்தபாய!
தென்னிலங்கையில் ஏற்பட்ட விபத்து ஒன்றிலிருந்து முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோத்தபாய தனது மனைவியுடன் இன்று 7ஆம் திகதி காலை சென்றிருந்த வாகனம் விபத்துக்கு உள்ளாகி உள்ளது.
இந்த அனர்த்தம் ஹக்மன பகுதியில் ஏற்பட்டதாக அந்தப் பகுதி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கோத்தபாய ராஜபக்ஸ பயணம் செய்த வாகனம் பிறிதொரு வாகனத்துடன் மோண்டு நிலையில், வீதியை விட்டு அகன்று மரத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த வாகனத்தின் சாரதி வலஸ்முல்ல ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் கோத்தபாய ராஜபக்ஸ மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் எந்தவித காயங்களுமின்றி தெய்வாதினமாக தப்பியிருக்கின்றனர்.
கோத்தபாய மற்றும் அவரது மனைவி ஆகியோர் கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டை மெதமுலவிலுள்ள அவர்களது பூர்வீக இல்லத்திற்கு சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
கோத்தபாயவின் வாகன சாரதியை ஹக்மன பொலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.