மீண்டும் ஒரு தாழமுக்கம்.
இலங்கைக்கு மேலாக காணப்படுகின்ற தாழமுக்கமானது தற்போது மேற்குத் திசையில் நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதனால் தற்போது நிலவிக்கொண்டிருக்கும் மழைகொண்ட காலநிலை நாளை முதல் குறைவடையும் என எதிர் பார்க்கப்படுகிறது.
இதே வேளை மீண்டும் ஒரு தாழமுக்கமானது எதிர்வரும் 9 ம் திகதி தென்கிழக்கு வங்காளவிரிகுடா கடல் பிராந்தியத்தில் அந்தமான் தீவிற்கு அண்மையில் உருவாகும் சாத்தியமுள்ளது.
கே. சூரியகுமாரன்
சிரேஷ்ட வானிலை அதிகாரி
மட்டக்களப்பு