2 வீதத்தால் பஸ் கட்டணம் குறைப்பு?

2 வீதத்தால் பஸ் கட்டணம் குறைப்பு?

பஸ் கட்டணத்தை குறைப்பது தொடர்பில் இன்று இறுதித் தீர்மானம் எட்டப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இன்று நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளுமாறு அனைத்து பஸ் சங்கங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் எம்.ஏ.பி. ஹேமச்சந்திர குறிப்பிட்டார்.

எரிபொருள் விலை குறைவடைந்தமைக்கு அமைவாக பஸ் கட்டணத்தை 2 வீதத்தினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை பஸ் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இதேவ‍ேளை எரிபொருள் விலை குறைவடைந்ததன் பலனை மக்களுக்கு வழங்க தயாராகவுள்ளதாக தனியார் பஸ் உரிமையாளர்களின் சங்கமும் குறிப்பிட்டுள்ளது.

கடந்த முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருளின் விலை குறைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து எரிபொருளின் விலையை குறைப்பதற்கு லங்கா ஐ.ஓ.சி. நிறுவனமும் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © 7773 Mukadu · All rights reserved · designed by Speed IT net