கலிபோர்னியா கேளிக்கை விடுதியில் துப்பாக்கி சூடு : 12 பேர் பலி!
புதன்கிழமை இரவு 11.20 அளவில் கலிபோர்னியாவின் தெளசன்ட் ஓக்ஸ் எனுமிடத்தில் அமைந்துள்ள கேளிக்கை விடுதியொன்றில் நடத்தப்பட்ட துப்பாக்கிசூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் உட்பட 12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் குறைந்தது 10 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
நபரொருவர் தானியங்கி துப்பாக்கி மூலம் துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டதுடன் புகைக்குண்டுகளையும் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிசூடு நடத்தப்பட்ட நேரத்தில் சுமார் 200 பேர் கேளிக்கை விடுதியினுள் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பெரும்பாலோனோர் கல்லூரி மாணவர்கள் எனவும் கல்லூரி ஒன்றினால் நடத்தப்பட்ட இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கேளிக்கைவிடுதிக்கு வருகை தந்திருந்தார்களெனவும் கூறப்பட்டுள்ளது.
துப்பாக்கிசூட்டை நடத்தியதன் பின்னர் சந்தேகநபர் தன்னைத் தானே சுட்டுக் கொன்றுள்ளதாகவும் ஆனால் துப்பாக்கிதாரி குறித்தோ அல்லது துப்பாக்கிச் தாக்குதலுக்கான காரணம் குறித்தோ மேலதிக தகவல்கள் எதுவும் இன்னும் கிடைக்கப்பெறவில்லையெனவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.