அப்பில் நிறுவனம் 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்க நடவடிக்கை!
5G வசதி கொண்ட ஐபோன் ஒன்றினை அப்பில் நிறுவனம் உருவாக்கி வருவதாகவும் அதனை எதிர்வரும் 2020ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது தகவல் தொழிநுட்பத்தில் சிறந்த இடத்தினை வகித்துள்ள 4Gக்கு அடுத்த கட்டமாக அதனை காட்டிலும் அதிக தொழிநுட்பத்தினை கொண்ட 5G வசதி கொண்ட ஐபோனை உருவாக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அப்பில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை ஸ்மார்ட் போன்களைத் தயாரிக்கும் ஏனைய பல நிறுவனங்களும் எதிர்காலத்தில் 5G வசதி கொண்ட தொலைபேசிகளை அறிமுகம் செய்வோமென அறிவித்துள்ளது.
இருப்பினும் அவ்வாறான தொலைப்பேசிகளை எப்போதும் வெளியிடுவோம் என்பது தொடர்பாக சரியான தகவல்களை அந்நிறுவனங்கள் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.