அரசாங்க ஊழியர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த மஹிந்த!
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பம் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பதவி கவிழ்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தலைமையிலான அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்படவிருந்த, வரவு செலவுத்திட்டத்தில் அரசாங்க ஊழியர்களுக்கு பல சலுகைகளை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
கடந்த வருட வரவுத் செலவு திட்டத்தில் அரசிய ஊழியர்களுக்கு 5000 ரூபாய் சம்பள உயர்வு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
எனினும் புதிய அரசாங்கத்தினால் அந்த வரவு செலவுத்திட்ட அறிக்கைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொழில் சங்கத்தின் பிரதான செயலாளர் அஜித் திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அரச ஊழியர்களின், சம்பள முரண்பாடுகளை அகற்றுவதற்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய ஆணைக்குழு நியமித்துள்ளதாகவும், அதன் அறிக்கை கடந்த மாதம் 28ஆம் திகதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும் அது தாமதமாகியதனால் அரச ஊழியர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அஜித் திலக்கரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு மேலதிகமாக அரச சேவையை செயற்படுத்துவதற்காக வருடாந்தம் நிதி அவசியமாக உள்ளதாகவும், அதற்கான நிதி வரவு செலவுத் திட்டத்தில் உரிய நேரத்தில் வழங்கப்பட வேண்டும் எனவும் அஜித் திலக்கரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.
ஆனாலும் தயாரித்த வரவு செலவுத் திட்டம் அறிக்கை இரத்து செய்யப்பட்டமையினால் இடைக்கால வரவு செலவு திட்டம் நிதியமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவினால் எதிர்வரும் 16ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
மைத்திரி – மஹிந்த அரசாங்கத்தினால் முன்வைக்கப்படவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் சம்பள உயர்வு தொடர்பான சாதகமான நிலைப்பாடுகள் காணப்படுமா என்பது தொடர்பில் அரசாங்க ஊழியர்கள் பெரும் ஆவலாக உள்ளனர்