இலங்கையின் அவல நிலை குறித்து கண்ணீர் விடும் லண்டன் மேயர்!
இலங்கையின் நிலைமை தொடர்பில் வடக்கு லண்டன் மேயர் கரீமா மரிகர் கவலை வெளியிட்டுள்ளார்.
தான் உயிர் வாழும் வரை தான் இலங்கையை நேசிப்பதாக பிரித்தானியாவின் வடக்கு லண்டன் ஹாரோ பிராந்தியத்தின் நகர மேயர் தெரிவித்துள்ளார்.
வடக்கு லண்டன் ஹாரோ பிராந்தியத்தின் நகர மேயர் இலங்கைக்கு தனிப்பட்ட விஜயம் ஒன்று மேற்கொண்டுள்ள நிலையில் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
தான் இலங்கைக்காக தனது உயிரை தியாகம் செய்வதற்கும் தயார் எனவும், நாடு பிளவடைவதை தான் எதிர்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
கண்டியில் பிறந்து பிரித்தானியாவில் வாழும் அவர், இலங்கை ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தந்தை, தாயை நேசிப்பது போன்று தாய்நாட்டை நேசிப்பதாகவும், தாய் மற்றும் தந்தையின் உடல் இலங்கை மண்ணிலேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கண்ணீருடன் கூறியுள்ளார்.
இலங்கை அரசியல் நிலைமை குறித்து கடும் அச்சத்தில் இருப்பதாகவும், நாடு பிளவுபடுவதனை ஒருபோதும் அனுமதிக்க போவதில்லை மேயர் மேலும் தெரிவித்துள்ளார்.