இலங்கை ஒரு “சிங்கள பெளத்த நாடு” என்பதை நிராகரிக்கும் மனோ!

இலங்கை ஒரு “சிங்கள பெளத்த நாடு” என்பதை நிராகரிக்கும் மனோ!

இலங்கை ஒரு “சிங்கள பெளத்த நாடு” என்ற கருத்தை தான் நிராகரிப்பதாக தமிழர் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

BBC சேவைக்கு வழங்கிய விசேட செவ்வியில், இந்நாட்டில் 80%மக்கள் சிங்கள பெளத்தர்கள். அவர்களுக்கே இந்நாடு சொந்தமானது என முத்தையா முரளிதரன் கூறியிருந்தார்.

அவரின் இந்த கருத்து பல்லிளிக்கும் வகையில் உத்தியோகப்பூர்வ ட்விட்டரில் கருத்து வெளியிட்டுள்ள மனோ கணேசன் மேற்கண்டவாறு கூறினார்.

மேலும் “இது பல்லின, பன்மொழி, பன்மத நாடு. இங்கே 3 மொழிகள், 4 மதங்கள், 19 இனக் குழுக்கள் வாழ்கின்றன.

இதை நான் அமைச்சராக இருக்கும் போதே ஆயிரம் முறை கூறியுள்ளேன். இன்றும் கூறுகிறேன். ஆகவே இந்த நாடு “சிங்கள பெளத்த நாடு” என்ற கருத்தை நான் நிராகரிக்கிறேன்” என கூறினார்.

இதேவேளை, மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் என்றும் முரளியின் கருத்துக்கு பதிலளித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net