இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை!

சேனா என்று அழைக்கப்படும் கம்பளிப்பூச்சி இனங்கள், தற்போது அம்பாறை உட்பட மூன்று மாவட்டங்களிலும் காணப்படுவதாக தகவல்கள் பதிவாகியுள்ளன.

சேனா கம்பளிப்பூச்சி முதலில் நைஜீரியாவில் அடையாளம் காணப்பட்டது. அதன்பின்னர் சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பு இந்தியாவில் காணப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறிருந்த போதிலும், இப்போது இலங்கையில் மூன்று மாவட்டங்களில் ஆபத்தை விளைவிக்க கூடிய கம்பளி பூச்சிகள் காணப்படுவதாக விவசாயத் திணைக்களத்தினால் நேற்று நடாத்தப்பட்ட மாதாந்த ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு வகையான இடைவிடாத வாசனையை கொண்டிருக்கும் இந்த வகை புழுக்கள் ஒரே இரவில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களை அழிக்கும் எனவும், ஒரு புழு ஒரு தடவையில் 200 முட்டைகள் இடும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த கம்பளிப்பூச்சி சுமார் 100 கி.மீ. தூரம்வரை காற்று வீசும் பாதையில் பறந்து செல்ல முடியும். இதனால் கம்பளிப்பூச்சிகள் வேகமாக பரவுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இவற்றைக் கட்டுப்படுத்துவதற்கு பூச்சிக் கொல்லி வீச ஆரம்பிக்கபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அதற்கு தேவையான நிதி உடனடியாக பெற்றுக்கொடுக்கப்படும் என விவசாய திணைக்கள அலுவலர்களுக்கு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர அறிவுறுத்தி உள்ளார்.

கம்பளிப்பூச்சு சிறு பருவத்தில் பச்சையாக இருக்கும் எனவும் அதன்பின்னர் பழுப்பு நிறமாக மாறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பூச்சியின் உடல் முழுவதும் பருக்கள் போன்று காணப்படும். தலையின் கீழ் “ய” எழுத்து போன்று வடிவம் காணப்படும்.

எனவே, பயிர்களுக்கு சேதம் விளைவிக்கும் மிக ஆபத்து வாய்ந்த கம்பளிப்பூச்சி பயிர்கள் மத்தியில் உள்ளதா என்பதைப் பற்றி வேளாண் அமைச்சகம் விவசாயிகள் விழிப்புடன் இருக்க வேண்டுமென கோருகிறது

இந்த கம்பளிப்பூச்சி வகை பயிர்கள் மத்தியில் இருந்தால் உடனடியாக 1920 மற்றும் 081-2388316என்ற இந்த இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net