புதிய அமைச்சர்களாக உதய கம்பன்பில – ஹிஸ்புல்லா சத்தியப்பிரமாணம்!

புதிய அமைச்சர்களாக உதய கம்பன்பில – ஹிஸ்புல்லா சத்தியப்பிரமாணம்!

உதய கம்பன்பில புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் 11 ஆவது அமைச்சரவை நியமனம் சற்று முன்னர் ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இதில் புத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சராக உதய கம்மன்பில சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

மேலும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராக எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

எஸ்.எம் சந்திரசேன பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

வர்த்தகம் மற்றும் வணிக அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

தபால் மற்றும் தொலைத் தொடர்பு அமைச்சராக சி.பி. ரத்நாயக்க சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

இவர் முன்னர் போக்குவரத்து இராஜாங்க அமைச்சராக நியமிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் பெட்ரோலிய அமைச்சராக காமினி லொக்குகே சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net