பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஜனாதிபதிக்கு அகிலவிராஜ் சவால்!
பெரும்பான்மை தம்மிடம் 113 இருப்பதாக கூறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்தை கூட்டி அப்பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டுமென முன்னாள் அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் சவால் விடுத்துள்ளார்.
தற்போது இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தொடர்பாக நேற்று (வியாழக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“வெளியுலகத்துக்கும், ஊடகங்களுக்கும் தங்களிடம் பெரும்பான்மை இருப்பதாக ஜனாதிபதி தொடர்ச்சியாக கூறி வருகின்றார்.
ஆகையால் அப்பெரும்பான்மை உண்மையென்றால் நாடாளுமன்றத்தை கூட்டுவதற்கு ஜனாதிபதி ஏன் தயங்க வேண்டும்?” என அகிலவிராஜ் காரியவசம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதேவேளை ஜனாதிபதியின் செயற்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஐக்கிய தேசிய கட்சி நேற்று கொழும்பில் வாகன பேரணியொன்றை நடத்தியமையும் குறிப்பிடத்தக்கது.