முட்டாளாக மாறிய முரளிதரன்! மனோ கணேசன் காட்டம்!
மூன்று வேளை சாப்பாடு என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தனது டுவிட்டர் தளத்தில் குறித்த கருத்தினை அவர் வெளியிட்டுள்ளார்.
இலங்கையின் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் நேற்று முன்தினம் சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் ஜனநாயகத்தைவிட நாட்டு மக்களுக்கு மூன்று வேளை சாப்பாடுதான் முக்கியம் என தெரிவித்திருந்தார்.
இந்த கருத்து பல ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பல விமர்சனங்களை தனதாக்கியிருந்தது.
இது தொடர்பில் விமர்சிக்கும் வகையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தனது டுவிட்டர் தளத்தில் குறித்த பதிவை இட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
"மூன்று வேளை சாப்பாடு" என்பது ஜனநாயகத்தை விட பெரிது என ஒரு சமூக உணர்வற்ற முட்டாளால் மட்டுமே கூற முடியும்.
— Mano Ganesan (@ManoGanesan) November 8, 2018