ரணிலின் நேற்றைய அழைப்பிற்கு மைத்திரியின் பதில்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க விரும்பம் தெரிவித்துள்ளார்.
எனினும் அவருடன் இணைந்து செயற்பட ஜனாதிபதி தயார் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் W.D.J.செனவிரத்ன இதனை ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படுவதற்கு ஆயத்தம் ரணில் விக்ரமசிங்க அறிவித்தார். எனினும் இணக்கம் இல்லை என தற்போது வரையிலும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு சந்தர்ப்பம் சந்தர்ப்பம் கிடைத்தால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்படுவதற்கு தயார் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்திய ஊடகத்திடம் நேற்று குறிப்பிட்டமை குறிப்பிடத்தக்கது.