அதிரடிப்படையினருடன் மோதல்: பாதாள உலகத் தலைவர் பலி!
விஷேட அதிரடிப்படையினருடன் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற மோதலில் பாதாள உலகத் தலைவரான மானெல் ரோஹன உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கம்புருபிட்டிய பகுதியில் வைத்து அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதாள உலகத் தலைவரான மானெல் ரோஹன என்பவர் பிரபல பாதாள உலகக் குழுவின் உறுப்பினரான மாகந்துர மாதேஸின் நெருங்கிய நண்பர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.