கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது!

ஒருதொகை சிகரட்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேநபர்களிடமிருந்து 41,000 சிகரட்கள் பறிமுதல் செய்யபபட்டுள்ளதாக பிரதி சுங்க பணிப்பாளர் விபுல மினுவன்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இவற்றின் பெறுமதி சுமார் 20 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாரவில மற்றும் கொழும்பை சேர்ந்த 35 மற்றும் 38 வயதுடைய சந்தேகநபர்கள் இருவரும் தமது 205 பயணப்பொதியில் மிக சூட்சுமமாக மறைத்து வைத்து, துபாயிலிருந்து நாட்டிற்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் சம்பவம் தொடர்பில் விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பிரதி சுங்க ஊடகப் பேச்சாளர் பிபில மினுவான்பிட்டிய தெரிவித்தார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net