தலதா மாளிகையில் விசேட வழிபாடுகளில் ஜனாதிபதி பங்கேற்பு
தனிப்பட்ட விஜயமாக இன்று (சனிக்கிழமை) முற்பகல் கண்டிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலதா மாளிகைக்கு சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடாதிபதிகளை சந்திந்து கலந்துரையாடலொன்றில் ஈடுபட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்விஜயத்தில் ஜனாதிபதியுடன், அமைச்சர்களான எஸ்.பி.திஸாநாயக்க, மஹிந்த அமரவீர மற்றும் முன்னாள் முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதி நேற்று நள்ளிரவு நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இச்செயற்பாடு இலங்கை அரசியலில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர் கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.