நாடாளுமன்றம் ஏன் இரவில் கலைக்கப்பட்டது?

நாடாளுமன்றம் ஏன் இரவில் கலைக்கப்பட்டது?

இலங்கை நாடாளுமன்றம் நேற்றிரவு கலைக்கப்பட்டமை தொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், அரச சொத்துக்களை தவறாக பயன்படுத்திகொள்ளவே இரவோடிரவாக நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதென ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதன் பின்னர் அலரி மாளிகையில் நேற்றிரவு (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்தபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-

”நேற்றிரவு நாடாளுமன்றத்தைக் கலைப்பது என்றால் எதற்காக நாடாளுமன்றம் கலைக்க சில நிமிடங்களுக்கு முன் அவசர அவசரமாக அமைச்சுப் பொறுப்புக்களை வழங்க வேண்டும்?

அரச வளங்களை மோசடியாக பயன்படுத்திக்கொள்ளவே அமைச்சுப் பொறுப்புக்களை வழங்குகின்றனர். ஜனநாயகத்திற்கு எதிரான வகையில், மக்களின் பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்தவே அவர்கள் இதனைச் செய்தனர்” என அவர் மேலும் குறிப்பிட்டார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net