நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை ஆதரிக்கிறார் சுப்ரமணியன் சுவாமி!
இலங்கை நாடாளுமன்றை கலைத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடவடிக்கை சரியானதென பா.ஜ.க.வின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையை தொடர்ந்து அவர் இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரித்திருந்தால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டிருக்காதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளமையானது, ஜனநாயகத்தின் தார்மீகத்தை மக்கள் தீர்மானிப்பதற்கு வழியேற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளதென அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.