நாட்டின் பெயரையே மாற்றி விட்டார் ஜனாதிபதி!
இலங்கையை இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு என இதற்கு முன்னர் அழைத்த போதிலும் இனிமேல் ஜனநாயகம் என்ற வார்த்தையை பயன்படுத்த முடியாது என ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பேச்சாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு ஓரிரு நாட்கள் மட்டுமே வரும் திருட்டு பிரதமரையும் திருட்டு அமைச்சரவையையும் நியமித்து ஜனாதிபதி சட்டவிரோதமாக நேற்றிரவு நாடாளுமன்றத்தை கலைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இலங்கைக்கு சர்வதேசத்திற்கு மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்தி, நாட்டை கீழ் நோக்கி தள்ளியமைக்கான முழு பொறுப்பையும் ஜனாதிபதியே ஏற்கவேண்டும்.
அத்துடன் எந்த காரணம் கொண்டு ஜனநாயகத்திற்கான போராட்டத்தை கை விடாது முன்னெடுத்துச் செல்ல போவதாகவும் அந்த போராட்டம் வெற்றிகரமாக நிறைவு செய்யப்படும் எனவும் ஹரின் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.