பாரிஸில் போர் நினைவு சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் ட்ரூடோ

பாரிஸில் போர் நினைவு சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார் பிரதமர் ட்ரூடோ

பிரான்ஸ் நாட்டில் கனடா சார்பில் முதல் முதலாக அமைக்கப்பட்டுள்ள போர் நினைவு சின்னத்திற்கு கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மரியாதையை செலுத்தியுள்ளார்.

பாரிஸ் அமைதி மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று (சனிக்கிழமை) பிரான்ஸ் சென்றுள்ளார்.

முதலாம் உலகப் போர் முடிந்து 100 வருடங்கள் நிறைவடைந்ததை நினைவு கூரவும், சர்வதேச ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கவும் இந்த மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாட்டுக்கு பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மக்ரோன் தலைமை தாங்குகிறார்.

இதில் 50க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

இந்நிலையில் பிரான்ஸின் கனடா அமைச்சர் Seamus O’Regan உடன் இணைந்து, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ போர் நினைவு சின்னத்திற்கு மரியாதையை செலுத்தினார்.

மேலும் இதனை தொடர்ந்து பாரம்பரிய விழா ஒன்றிலும் பிரதமர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net