புதிதாக நியமிக்கப்பட்ட 58 உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

புதிதாக நியமிக்கப்பட்ட 58 உறுப்பினர்களுக்கு ஏற்பட்ட சிக்கல்!

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதால் புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டுள்ள 58 உறுப்பினர்கள் தமக்கான ஓய்வூதியத்தை இழந்துள்ளனர்.

கடந்த 26 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அதிரடியாக நீக்கிவிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார்.

இதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி தலைமையிலான புதிய அமைச்சர்களும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொப்பத்துடனான விசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக நேற்று நள்ளிரவு முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.

குறிப்பாக அமைச்சர்கள் 5 வருடங்கள் அவர்களது பதவியை தொடர்ந்தால் மட்டுமே அவர்களுக்கான ஓய்வூதியங்கள் வழங்கப்படும்.

ஆனால் புதிய அரசாங்கமும், புதிய அமைச்சரவையும் நியமிக்கப்பட்டு 14 நாட்கள் முடிவடைய முன்னரே நாடாளுமன்றம் ஜனாதிபதியால் கலைக்கப்பட்டதால் அவர்களுக்கான ஓய்வூதியம் கேள்விக்குறியாகியுள்ளது.

Copyright © 3930 Mukadu · All rights reserved · designed by Speed IT net