மைத்திரிக்கு எதிராக ஐ.தே.க- ஜே.வி.பி நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக ஜக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரு கட்சிகளும் இணைந்து மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வுள்ளன.
குறித்த இரு கட்சிகளும் இன்று (சனிக்கிழமை) இத்தகவலை வெளியிட்டுள்ளன.
அரசியலமைப்புக்கு முரணாக ஜனாதிபதி தொடர்ச்சியாக செயற்பட்டு வருகின்ற நிலையில் நேற்று நாடாளுமன்றத்தையும் சட்டத்துக்கு முரணாக கலைத்துள்ளதாக இவ்விரு கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளதுடன் அதற்கு கண்டனத்தையும் வெளியிட்டுள்ளன.
இந்நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரியின் ஜனநாயக முரணற்ற செயற்பாட்டுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழங்கு தொடர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இதேவேளை 19ஆவது திருத்த சட்டத்தின்படி ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்க முடியாதெனவும் அதற்கு அவருக்கு அதிகாரம் இல்லையெனவும் கூறி, தமிழ் தேசிய கூட்டமைப்பும் நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ளதாக அறிவித்துள்ளது.
எனினும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பினர், “அரசியலமைப்புக்கு அமைவாகவே ஜனாதிபதி அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டு வருகின்றார் எனவும் நாடாளுமன்றத்தை கலைத்தமை கூட அரசியலமைப்புக்கு அமைவாகவே ஆகும்” என தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.