மைத்திரி – மஹிந்தவிற்கு எதிராக தேங்காய் உடைத்து வழிப்பட்ட ஐ.தே.க!

மைத்திரி – மஹிந்தவிற்கு எதிராக தேங்காய் உடைத்து வழிப்பட்ட ஐ.தே.க!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரின் கூட்டாட்சி கவிழ்க்கப்பட்டு, ஆட்சி மாற வேண்டுமென கோரி தேங்காய் உடைத்து பூஜை வழிபாடுகளில் ஐக்கிய தேசிய கட்சி ஈடுபட்டுள்ளது.

ஜனாதிபதி நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை அறிவித்துள்ள நிலையில், ஐ.தே.க.வினர் முன்னேஸ்வரம் சிவன் கோயில், பிள்ளையார் கோயில் மற்றும் காளி கோயில்களில் ஆட்சி மாற்றத்தை வேண்டி தேங்காய் உடைத்து இன்று (சனிக்கிழமை) வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த பூஜை வழிபாடுகளில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகர சபை மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட கட்சி தொண்டர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net