கலிபோர்னிய காட்டுத்தீ: உயிரிழப்புக்கள் மேலும் அதிகரிப்பு!
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்வடைந்து உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தின் வட பகுதியில் சாக்ரமண்டோ நகருக்கு வடக்கே கடந்த 8ஆம் திகதி தொடக்கம் காட்டுத்தீ வேகமாகப் பரவி வருகிறது.
குறித்த காட்டுத்தீ காரணமாக 6 ஆயிரத்து 700க்கும் மேலான வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன், பல மில்லியன் ரூபாய் அமெரிக்க டொலர் பெறுமதியிலான சொத்துக்களும் அழிவடைந்துள்ளன.
மேலும் 70000 ஏக்கரிற்கு மேற்பட்ட நிலப்பரப்பு தீயினால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வேகமாகப் பரவிவரும் பரவி வரும் காட்டுத் தீ காரணமாக செக்ரமெண்டோ நகரத்தின் மீது பாரியளவில் புகைமண்டலம் பரவியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த காட்டுத் தீ காரணமாக மலைப்பகுதிகளில் உள்ள பெறுமதி வாய்ந்த ஓக் மரங்கள் பெருமளவில் எரிந்து நாசமாகியுள்ளன.
இந்நிலையில், காணாமல் போன 35 பேரைத் தேடும் பணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கலிபோர்னியா வரலாற்றில் மிக பெரிய அழிவை ஏற்படுத்திய காட்டுத்தீ இது என அம்மாகாணத்தின் செரீப் ஹோனியா ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.