பரபரப்பான நிலையில் நாட்டு மக்களுக்கு மஹிந்த கொடுத்த இன்ப அதிர்ச்சி!
இலங்கையில் மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான தொலைபேசி அழைப்புக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிரதான தொலைபேசி அழைப்பு சேவை நிறுவனத்தினால் நூற்றுக்கு 10 வீதம் தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணம் குறைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மஹிந்த ராஜபக்ச நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டதன் பின்னர் மக்களுக்கு வரி நிவாரணங்களை அறிமுகப்படுத்தி வைத்துள்ளார்.
அதன் ஒரு கட்டமாக தொலைபேசி அழைப்புக்கான வரிப்பணத்தை குறைப்பதற்கு, நிதி அமைச்சின் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலைகளுக்கு மத்தியில், வரி நிவாரணங்களை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.