ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து மஹிந்த உட்பட பலர் மொட்டுக்கு தாவினர் !
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பலர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளனர்.
அதன்படி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பொதுஜன பெரமுனவின் தவிசாளர் ஜீ.எல்.பீரிஸிடமிருந்து அங்கத்துவத்தைப் பெற்றுக்கொண்டார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான மஹிந்த யாபா அபேவர்தன, சி. பி. ரத்னாயக , ஜானக பன்டார தென்னகோன், ஜோன்ஷ்டன் பெர்னாந்து, மஹிந்தானந்த அளுத்கமகே, பியங்கர ஜயரத்ன, ரோஹித அபேகுனவர்தன, பிரசன்ன ரனதுங்க, விஜயசேகர, ஜானக வக்குபுர, நாமல் ராஜபக்ஷ, செஹான் சேமசிங்க, ஹெனுக விதான கமகே , அருந்திக பிரனாந்து, காஞ்சன விஜயசேகர, நிமல் லன்ஷா, இந்நிக அனுருத்த, டி.வி. சானக, அனுர பிரியதர்ஷன ,டி.பி. விதானகே, சந்திம வீரக்கொடி, சுசந்த புஞ்சி நிலமே , லக்ஷமன் யாபா, சுமேதா பி. ஜயசேன, சுதர்ஷனி பெர்னாண்டோ புள்ளே, தாரனத் பஸ்னாயக ஆகியோர் இன்றையதினம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்களாக உறுப்புரிமை பெற்றுக் கொண்டனர்.
இதுவரை 54 பேர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பொதுஜன பெரமுனவுடன் இணைந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.