19 அரசியலமைப்பில் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை!
19 அரசியலமைப்பின் எந்தவொரு இடத்திலும் நிறைவேற்று அதிகாரம் குறைக்கப்படவில்லை என விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நடைமுறையிலுள்ள நாடாளுமன்றத்துடன் நாட்டின் செயற்பாடுகளை தொடந்தும் முன்னெடுக்க முடியாது என ஜனாதிபதி கருதுவாராக இருந்தால் தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக நீதிமன்றத்தினை நாடவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன தெரிவித்துள்ளன.
அத்துடன், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன கடும் அதிருப்தியினை வெளியிட்டுள்ளன.
மேலும் அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட பல சர்வதேச நாடுகளும் ஜனாதிபதியின் செயற்பாடு தொடர்பில் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.