அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் அவசர அறிவிப்பு!
யாராவது வழங்கும் நிறைவேற்று உத்தரவினை நிராகரிக்குமாறு அனைத்து அரச ஊழியர்களிடம் கேட்டுக்கொள்வதாக முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய கேட்டு கொண்டுள்ளார்.
அரசியலமைப்பின் திருத்தச்சட்டத்தின் கீழ் தங்கள் பொறுப்பை ஏற்றுள்ள அனைத்து நபர்களும், கட்சி அரசியல் குறித்து கருத்திற்கொள்ளாமல் ஜனநாயகத்தை பாதுகாப்பதற்காக முன்நிற்க வேண்டும் என்பதே பொறுப்பாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அறிக்கை ஒன்றை வெளியிட்டு முன்னாள் சபாநாயகர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பொது மக்கள் தெரிவு செய்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமையை பலவந்தமாக பறிப்பதனை தான் அவதானித்ததாக முன்னாள் சபாநாயகர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தை வேண்டும் என்றே கண்டுக்கொள்ளாமல் இருப்பது மக்களின் சுதந்திரம் மற்றும் உரிமைக்கு பாரிய ஆபத்தாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான சூழலில் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கு பிரமாணம் செய்து கொண்டுள்ள அனைத்து அரச ஊழியர்களும் அந்த பிரமாணம் தொடர்பில் மீண்டும் நினைவுகூற வேண்டும் என முன்னாள் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
அரச சேவை மற்றும் பொலிஸார் மற்றும் நீதிமன்ற சுயாதீனத்தன்மை தொடர்பில் எங்கள் பொறுப்பை நினைவில் வைத்து கொள்ள வேண்டும் என்பதே உச்ச சட்டமான அரசியலமைப்பு தொடர்பிலான எங்கள் பொறுப்பாகும் என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்.