அரசியல் நடவடிக்கைகளுக்கு இலவசமாக பேருந்தை வழங்க வேண்டாம்!
இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகளை அரசியல் நடவடிக்கைகளுக்காக இலவசமாக வழங்க கூடாது என அச்சபையின் தலைவருக்கு நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அரசியல் நடவடிக்கைகளுக்காக, பொதுச் சொத்துக்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் சகல அரசியல் கட்சிகளிடமும் கோரிக்கை விடுப்பதாகவும் அமைச்சர நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமன்றி எவரும் பணத்தை செலுத்தி பேருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த மூன்றரை வருடங்களில் இலங்கை போக்குவரத்து சபை நிதி வளர்ச்சியடைந்துள்ள நிலையில், மீண்டும் அரசியல் செயற்பாடுகளால் இந்த நிலைமையில் பாதிப்பு ஏற்படக் கூடாதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.