கடும் விவாதத்தால் சூடு பிடிக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம்!

கடும் விவாதத்தால் சூடு பிடிக்கும் கொழும்பு உயர் நீதிமன்றம்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தை கலைத்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இன்னும் 6 மனுக்களே விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ள நிலையில் தீர்ப்பு தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்தி வருகின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி சட்டத்தரணிகளான கனக ஈஸ்வரன், சுமந்திரன், திலக் மாரப்பன, ஜயம்பதி விக்ரமரத்ன மற்றும் விரான் கொரயா ஆகியோர் கடும் விவாதம் புரிந்து வருவதாக தெரியவருகிறது.

அத்துடன் நீண்ட வாதப்பிரதிவாதங்களின் பின்னர் நீதிமன்றின் விசாரணைகள் 15 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டு மீண்டும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு எவ்வாறு அமையும் என்ற எதிர்பார்ப்பில் அனைவரும் இந்த விடயத்தில் கவனம் செலுத்தியுள்ள நிலையில், நீதிமன்ற வளாகத்தில் பெருந்திரளானோர் திரண்டுள்ளனர்.

மேலும், தீர்ப்பு எப்பொழுது வெளியாகும் என்ற பரபரப்பு சூழ்ந்துள்ளதுடன் தீர்ப்பு இன்று இரவு வருவதற்கான சாத்தியமும், ஓரிரு நாட்களின் பின்னர் வருவதற்கான சாத்தியமும் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, தீர்ப்பு எவ்வாறு அமையும் என்பது குறித்து எந்தவொரு விடயமும் கூறமுடியாத சந்தர்ப்பத்தில் எதுவும் நடக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net