பிரித்தானியாவில் வீதி விபத்து: குழந்தை உட்பட 4 பேர் பலி!
இங்கிலாந்தில் இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் குழந்தை உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தின் ஷெபீல்ட் பகுதியில் (சனிக்கிழமை) குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்திற்குள்ளான காரின் மீது அதிக வேகமாக வந்த காரொன்று மோதியதால் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த விபத்தில் 35 மற்றும் 50 வயதுடைய இரண்டு ஆண்களும், 41 வயதுள்ள ஒரு பெண்ணும் சம்பவ இடத்தியிலேயே உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் படுகாயங்களுக்குள்ளான ஒரு வயதுக் குழந்தை மீட்கப்பட்டு அடுத்த சில நிமிடங்களில் உயிரிழந்தது.
இவ்விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார், குறித்த விபத்தினை ஏற்படுத்திய 23, 17 மற்றும் 18 வயதுள்ள மூன்று இளைஞர்களைக் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த விபத்துத் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.