பொதுத்தேர்தலில் களமிறங்குகின்றார் பிரதமர் மஹிந்த?
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இம்முறை பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்டத்தை பிரதி நிதித்துவப்படுத்தி களமிறங்குவார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்காக, பல மாவட்டங்களிலிருந்து பிரதமர் மஹிந்தவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியிலிருந்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகப்பூர்வமாக விலகி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.