மோடியை மாலைதீவில் சந்திப்பார் மஹிந்த?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துக் கலந்துரையாடும் நோக்கில் புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இந்த வாரக் கடைசியில் மாலைத்தீவுக்குச் செல்லும் வாய்ப்புக்கள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாலைத்தீவில் அண்மையில் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற இப்ராகிம் சோலி எதிர்வரும் 17ஆம் திகதி பதவியேற்கவுள்ளார்.
இந்நிகழ்வில் பங்கேற்க இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஆகையால் மோடி, எதிர்வரும்17ஆம் திகதி மாலைத்தீவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதன்போது பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் மோடியுடன் கலந்துரையாடலில் ஈடுபடுவதற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சந்திப்பில் இலங்கை நாடாளுமன்றக் கலைப்பு மற்றும் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மோடிக்கு, மஹிந்த தெளிவுபடுத்தவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டமையை தொடர்ந்து இந்தியாவுடன் எந்ததொரு அதிகாரபூர்வ நடவடிக்கைகளும் இலங்கை முன்னெடுக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.