ரவி கருணாநாயக்கவின் மகள் நீதிமன்றத்தில் முன்னிலை!

ரவி கருணாநாயக்கவின் மகள் நீதிமன்றத்தில் முன்னிலை!

முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா கருணாநாயக்க இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

ரவி கருணாநாயக்க போலியான வாக்கு மூலம் வழங்கிய குற்றச்சாட்டு தொடர்பில் அவரின் மகளிடம் விசாரணை மேற்கொள்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்நிலையில் நீதிமன்ற அழைப்பாணைக்கு அமைய ஒனேலா கருணாநாயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகவுள்ளார்.

பிணைமுறி மோசடி தொடர்பான விசாரணைகளில் தனது அறிக்கையையும் பதிவு செய்யுமாறு, குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் நீதிமன்றம் தெரிவிக்க வேண்டுமென ஒனேலா கருணாநாயக்க இதற்கு முன்னர் கோரியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்கு நியமிக்கப்பட்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் உண்மை கூறுவதாக ரவி கருணாநாயக்க உறுதியளித்துவிட்டு பொய் கூறியதாகவே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net