தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு எதிராக நாமல் கண்டனம்!
நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டமைக்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹூலும் மனுத்தாக்கல் செய்துள்ள நிலையில், அதற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் பல சந்தர்ப்பங்களில் தேர்தல் பிற்போடப்பட்டது.
அப்போதெல்லாம் அவர் ஏன் உயர்நீதிமன்றத்திற்குச் செல்லவில்லையென நாமல் கேள்வியெழுப்பியுள்ளார்.
அத்தோடு, நாட்டில் தேர்தல் இடம்பெறுவதை உறுதிப்படுத்துவதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை என்றும், தேர்தல் நடைபெறுவதை தடுப்பது அதன் கடமையல்ல என்றும் நாமல் மேலும் குறிப்பிட்டுள்ளனார்.
எவ்வாறாயினும், ஆட்சியமைக்கப்பட்டு நான்கரை வருடங்கள் பூர்த்தியாவதற்கு முன்னர் நாடாளுமன்றை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்று தெரிவித்தே உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.