நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி.

நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி – ரணில்

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டமை நாட்டு மக்களுக்கு கிடைத்த வரலாற்று வெற்றி என ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தை கலைக்கும் வகையில் ஜனாதிபதி விடுத்த வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 7 ஆம் திகதி வரை இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தனது உத்தியோகப்பூர்வ டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்திலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மக்கள் முதல் வெற்றியை பெற்றுள்ளனர். நாங்கள் முன்னோக்கிச் சென்று எங்கள் மக்களின் இறையாண்மையை மீண்டும் ஸ்தாபிக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

Copyright © Mukadu · All rights reserved · designed by Speed IT net