பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மனுக்கள் மீதான விசாரணை மீண்டும் ஆரம்பம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நாடாளுமன்ற கலைப்பு தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்கள் மீதான விசாரணை தற்போது மீண்டும் ஆரம்பமாகியுள்ளன.
ஏற்கனவே 17 மனுக்கள் ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நேற்றைய நாள் முடியும்போது 6 மனுக்களின் விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இன்று அந்த மனுக்களும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இதேவேளை ஜனாதிபதியின் தீர்மானத்துக்கு ஆதரவாக 5 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த மனுக்களை உதய கம்மன்பில, ஜீஎல் பீரிஸ் மற்றும் வாசுதேவ நாணயக்கார உட்பட்டவர்கள் தாக்கல் செய்துள்ளனர்.
அத்துடன் சட்டமா அதிபர் இந்த மனுக்கள் தொடர்பில் இன்று விளக்கமளிக்கவுள்ளார். இந்த நிலையில் உயர்நீதிமன்ற வளவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.