ஒருவரை ஒருவர் கட்டித்தழுவிய மஹிந்த, ரணில் அணியினர்.
பாராளுமன்ற கட்டிடப் பகுதியில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ரணில் அணியினர் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவியதைக் காணமுடிந்தது.
பெரும் சர்ச்சைகளுக்கு மத்தியில் இன்று காலை 10 மணியளவில் சாபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளுமன்றம் கூடியுள்ளது.
இந்த பாராளுமன்ற கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என நேற்றிரவு அறிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அணியினர் இன்று காலை பாரளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பாராளுமன்றுக்கு வந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களை கட்டித் தழுவி சந்தோசமாக கலந்துரையாடுவதையும் காண முடிந்தது.