சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது.

சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது – நாமல்

சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற வளாகத்தில் வைத்து இன்று(புதன்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த மூன்றரை ஆண்டுகளாக சபாநாயகர் கரு ஜயசூரிய இவ்வாறாக பக்கச்சார்பான செயற்பாடுகளை செய்து வருகின்றார்.

நிலையியற் கட்டளைகளை மீறிச் செயற்பட்டுள்ளதாகவும், கரு ஜயசூரியவின் அண்மைய செயற்பாடுகள் அரசியல் ரீதியான பக்கச்சார்பு தன்மையை வெளிப்படுத்தி நிற்கின்றது.

ரணில் விக்ரமசிங்கவிற்கு 113 பலம் இருப்பதாக உறுதிபடத்தெரிந்தால் ஆவணமொன்றை கையொப்பமிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறான ஓர் நிலைமையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ச பதவியை ராஜினாமா செய்வார். மாறாக இவ்வாறான காரியங்களில் ஈடுபடக்கூடாது.

இன்றைய நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பு குறித்த விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரங்களை பயன்படுத்தியுள்ளார். அத்துடன், சபாநாயகருக்கு நிறைவேற்று அதிகாரங்கள் கிடையாது“ எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Copyright © 0292 Mukadu · All rights reserved · designed by Speed IT net