நான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்தான். – வசந்த சேனாநாயக்க
தமது அமைச்சுப்பதவியினை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக வசந்த சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றுள்ளதாக லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்துள்ள நிலையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளவர்களுக்கு ஆதரவளித்து அவர்களுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்கிறேன். நான் எதிர்பார்த்த பெரும்பான்மை கிடைக்கவில்லை. ஜனாதிபதியிடம் எனது பதவி விலகல் கடிதத்தை சமர்ப்பிப்பேன். நான் என்றுமே ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் தான்“ என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்றில் சுயாதீனமான முறையில் செயற்பட தீர்மானித்துள்ளதாக அமைச்சர் வசந்த சேனாநாயக்க இன்று காலை தெரிவித்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.