மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம்! த.தே.கூட்டமைப்பில் இருவர் மாயம்.
மஹிந்தவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் இன்று முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 14 உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
அதில் கூட்டமைப்பின் 14 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்ட நம்பிக்கையில்லா பிரேரணையின் பிரதியையும் பதிவிட்டுள்ளார்.
இந்த தீர்மானத்தில், ஜனாதிபதியால் 26ஆம் திகதி வெளியிட்டப்பட்ட விஷேட வர்த்தமானி அறிவித்தல்கள், மற்றும் நியமனங்கள் சட்டத்திற்கு முரணானவை என்றும், 26ஆம் திகதிக்குப் பின்னர் மஹிந்தவை பிரதமராக நியமித்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை இல்லை என்றும் குறித்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களில், 14 உறுப்பினர்கள் மாத்திரமே கையொப்பமிட்டுள்ளனர்.
இருவரது பெயர்கள் இதில் குறிப்பிட்டிருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.