மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தாரா வடிவேல் சுரேஷ்!

மீண்டும் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்தாரா வடிவேல் சுரேஷ்!

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் அங்கு புதிய அரசாங்கத்தில் பிரதி அமைச்சராக பொறுப்பேற்ற வடிவேல் சுரேஷ் இணைந்துள்ளார்.

இன்று காலை இடம்பெற்ற கட்சித்தலைவர்கள் கூட்டத்தினைத் தொடர்ந்து காலை 10 மணியளவில் நாடாளுமன்ற அமர்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

இதன் பின்னர் நாளை காலை 10 மணிவரை நாடாளுமன்ற சபை நடவடிக்கைகள் யாவற்றையும் சபாநாயகர் கருஜயசூரிய ஒத்திவைத்துள்ளார்.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், அங்கு மஹிந்த – மைத்திரியின் புதிய அரசாங்கத்தில் இணைந்த உறுப்பினர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

Copyright © 1429 Mukadu · All rights reserved · designed by Speed IT net