மஹிந்தவிற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவளிக்க சிறுபான்மை கட்சிகள் தீர்மானம்.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன.
அத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில உறுப்பினர்களும் இதற்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.